வவுனியா:
உரச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்கள் மற்றும் உர விற்பனை முகவர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்றுக் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
 
வவுனியா மாவட்டச் செயலாளர் திரு. பி.ஏ. சரத்சந்திர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மேலதிக மாவட்டச் செயலாளர் திரு. என். கமலதாசன், உரச் செயலகத்தின் வவுனியா பிரதி பணிப்பாளர் திரு. பந்துல குமார உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
 
விவசாயிகளுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குதல், தரமான விவசாய இரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்களை தங்குதடையின்றி பெற்றுக்கொடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
 
அத்துடன், இந்த இரசாயனப் பயன்பாடுகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது தொடர்பாகவும் அதிகாரிகளினால் முகவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.