மகா சங்கத்தினர் (பௌத்த துறவிகள்) கொழும்பில் நடத்திய போராட்டம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு காலி வீதி (Galle Road) தற்போது மீண்டும் திறக்கப்பட்டு, போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
 
முன்னதாக, பௌத்த துறவிகளின் இந்த திடீர் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக காலி வீதியின் ஒரு பகுதி முழுமையாக முடக்கப்பட்டிருந்ததுடன், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
 
பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முற்பட்டதுடன், பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிக வீதி தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
 
தற்போது போராட்டம் நிறைவடைந்ததை அடுத்து, காலி வீதியின் போக்குவரத்து தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்திற்காக வீதி முழுமையாக திறந்துவிடப்பட்டுள்ளது.
 
இருப்பினும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நிலைமைகளை பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.