கொழும்பு — பாடசாலையில் அனுமதிக்கப்பட்டு, எவ்வித நியாயமான காரணமும் இன்றி நீண்டகாலமாக வகுப்புகளுக்குச் செல்லாமல் தவிர்த்து வந்த 30க்கும் மேற்பட்ட பிள்ளைகளை மீண்டும் பாடசாலைகளில் சேர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை கிராண்ட்பாஸ் பொலிஸார் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைய, இன்று இப்பிள்ளைகளை சிங்கள, இந்து மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் சேர்த்து, அவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட பாடசாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடி பிள்ளைகளின் விபரங்களைச் சேகரித்த பொலிஸார், பின்னர் தமது நேரடித் தலையீட்டின் மூலம் பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை மீண்டும் வகுப்பறைகளுக்கு அனுப்பியுள்ளனர்.
பெற்றோருக்கு எச்சரிக்கை:
அதேவேளை, நியாயமான காரணங்கள் ஏதுமின்றி தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பத் தவறும் பெற்றோருக்கு எதிராக எதிர்காலத்தில் சட்டப்படி வழக்குத் தொடரப்படும் என கிராண்ட்பாஸ் பொலிஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

தொடர் கண்காணிப்பு:
இப்பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் தடைப்படாமல் தொடர்வதையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்காக விசேட கண்காணிப்பு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பாடசாலைகள் ஊடாக இப்பிள்ளைகளின் நாளாந்த வருகை மற்றும் தகவல்களைப் பெற்று பொலிஸார் தொடர்ந்து கண்காணிக்கவுள்ளனர்.

பொலிஸாரின் இந்த பாராட்டுக்குரிய தலையீடு காரணமாக, பறிபோகவிருந்த பல பிள்ளைகளின் எதிர்காலம் மீண்டும் ஒளியமயமாக மாறியுள்ளது.
Comments 0
Be the first to comment.