பூநகரி:
வடக்கு தென்னை முக்கோண வலய திட்டத்தின் கீழ், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியில் தென்னை செய்கையை விரிவுபடுத்தும் ஆரம்ப நிகழ்வு இன்று (அக்டோபர் 13) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
வடக்கு தென்னை முக்கோண வலய திட்டத்தின் கீழ், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியில் தென்னை செய்கையை விரிவுபடுத்தும் ஆரம்ப நிகழ்வு இன்று (அக்டோபர் 13) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தென்னை பயிர்ச்செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தென்னை பயிர்ச்செய்கை சபையின் பொது முகாமையாளர் W.M.A.B. விஜயசிங்க முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, முதலாவது தென்னங்கன்றை நாட்டி செய்கை திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இலங்கையின் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி 'வடக்கு தென்னை முக்கோண வலயம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாகவே பூநகரி பிரதேசத்தில் இத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் பூநகரி பிரதேச செயலாளர் மு. ஆயகுலன், தென்னை பயிர்ச்செய்கை சபையின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர் மற்றும் பிரதேச பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் முக்கிய அங்கமாக, நாச்சிக்குடா கிராமத்தைச் சேர்ந்த 40 தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்குத் தலா ஒரு தொகுதியாகத் தென்னங்கன்றுகள் இதன்போது இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இத்திட்டம் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன், எதிர்காலத்தில் வட மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







Comments 0
Be the first to comment.