கொழும்பு:
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் (Sri Lanka Cricket) நிறுவனத்தின் ஆளுகை மற்றும் நிர்வாகத்தை மறுசீரமைப்பதற்கான சட்டமூலமும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலமும் இன்று (06) நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, அந்தந்த அமைச்சர்களினால் இச்சட்டமூலங்கள் சபை முன்னிலையில் வைக்கப்பட்டன.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் முறையான ஆளுகையை உறுதிப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தை, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கும் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்குமான "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்", நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், விளையாட்டுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய முக்கிய துறைகளில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ள மிக முக்கியமான சட்டமூலங்களாக இவை பார்க்கப்படுகின்றன. இச்சட்டமூலங்கள் மீதான விவாதங்கள் மற்றும் அடுத்தகட்ட வாசிப்புகள் வரவிருக்கும் நாடாளுமன்ற அமர்வுகளில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
Comments 0
Be the first to comment.