குறித்த பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், அப்பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கங்களுடன் தற்காலிகமாக மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக பொதுமக்கள் உடனடியாகப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் திறந்தவெளிகளிலோ அல்லது மரங்களின் கீழோ தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
உடனடியாக பாதுகாப்பான கட்டிடங்கள் அல்லது மூடிய வாகனங்களுக்குள் செல்ல வேண்டும்.
வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகளில் வேலை செய்வதையோ அல்லது தங்குவதையோ முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
கம்பி இணைப்புடைய தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
சைக்கிள், டிராக்டர் மற்றும் திறந்த படகுகள் போன்ற பாதுகாப்பற்ற வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
பலத்த காற்றினால் மரங்கள் மற்றும் மின் கம்பிகள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் வீதிகளில் பயணிப்போர் அவதானமாக இருக்க வேண்டும்.
Comments 0
Be the first to comment.