தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை இன்று (12) மாலை 4.00 மணி முதல் நாளை (13) மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

 இரத்தினபுரி (குருவிட்ட, அயகம, எஹெலியகொட, வெலிகேபொல, இரத்தினபுரி, களவானை, இம்புல்பே, நிவித்திகலை), கேகாலை (தெஹியோவிட்ட, கேகாலை, ரம்புக்கனை, யட்டியாந்தோட்டை, அரநாயக்க, வரக்காப்பொல), மாத்தளை (அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை, மாத்தளை), கண்டி (ஹதரலியத்த, தும்பனை), பதுளை (எல்ல, பசறை), கொழும்பு (பாதுக்க) மற்றும் நுவரெலியா (ஹங்குரன்கெத்த) ஆகிய மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மண்ணில் வெடிப்பு ஏற்படுதல், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்வடைதல், திடீரென நீரூற்றுகள் தோன்றுதல் போன்ற மண்சரிவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.