கொழும்பு:
தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவருமான பிரதீப் காரியவசம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.
'சிரிலிய சவிய' விவகாரம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷவினால் நடத்தப்பட்ட 'சிரிலிய சவிய' (Siriliya Saviya) நிதி அமைப்பு மற்றும் அதன் வங்கிக் கணக்குகள் தொடர்பான முறைகேடுகள் குறித்து நீண்டகாலமாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிதி விவகாரங்களுடன் பிரதீப் காரியவசமுக்கு உள்ள தொடர்பு குறித்தே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் இன்று காலையில் கொழும்பு, கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்
ஒரே நாளில் ராஜபக்ஷ குடும்பத்தினருடன் தொடர்புடைய இரு முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டுள்ளமை இலங்கையின் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments 0
Be the first to comment.