கொழும்பு:
"முழு நாடுமே ஒன்றாக" (முழு நாட்டையும் ஒன்றிணைப்போம்) என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஒரு வருட காலத்திற்குள், 109 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய நச்சு போதைப்பொருட்கள் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2026 ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில், கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் இணைந்து கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் மேற்கொண்ட தொடர் அதிரடி சோதனைகளின் போதே இந்த போதைப்பொருள் இருப்புக்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தகவலின்படி, இந்த 2026 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை மட்டுமே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 68 பில்லியன் ரூபா பெறுமதியான நச்சு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் (ஒக்டோபர் 24) மாத்தறை, தலல்ல பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கைக்குள் கடத்தப்படவிருந்த பாரியளவிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 561 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 11.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான இந்த தேசிய நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Comments 0
Be the first to comment.