ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, அக்டோபர் 27/28, 2026 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தலைமை நீதவான் அஸங்க போதராகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று (13 அக்டோபர் 2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பணச்சலவை தடுப்புச் சட்டம் ஆகிய இரண்டின் கீழும் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு விசாரணைகளையும் உள்ளடக்கி, ஒரு ஒருங்கிணைந்த கூட்டு குற்றப்பத்திரிகையை (Consolidated Indictment) தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 
 

 இந்த வழக்கினை நிரந்தர மேல் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் (High Court Trial-at-Bar) முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்காக, பிரதம நீதியரசரிடம் அனுமதி கோரவுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த லஞ்ச ஊழல் வழக்கு (Bribery Case) வழக்கின் கீழ் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்து, அக்டோபர் 28 வரை விளக்கமறியலை நீடித்துள்ளது. இதன் காரணமாகவே அவர் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளார். 

மேலும் இதே பணச்சலவை வழக்கு (Money Laundering Case) எயார்பஸ் விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தொடர்ந்த வழக்கில், கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30 அன்று அவருக்கு நிபந்தனை பிணை வழங்கியிருந்தது.

500,000 ரூபா ரொக்கப் பிணை, தலா 100 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் வெளிநாட்டுப் பயணத்தடை ஆகிய நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்ட போதிலும், பிரதான லஞ்ச ஊழல் வழக்கில் பிணை மறுக்கப்பட்டதால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.