நைஜீரியாவில் 32 பேருடன் ஆற்றுப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானத்தில் பயணித்த எவரும் உயிர் பிழைக்கவில்லை என்றும், அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் நைஜீரிய அதிபர் போலா டினுபு (Bola Tinubu) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நைஜீரிய விமானப்படைக்குச் சொந்தமான ATR-42 ரக ராணுவ விமானம் (NAF 931), பெனின் நகரிலிருந்து லாகோஸ் நோக்கி நேற்று தனது வழக்கமான பயணத்தை மேற்கொண்டது. உள்ளூர் நேரப்படி காலை 09:13 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த அந்த விமானம், ஒண்டோ மாநிலத்தின் இக்போகோடா கடற்படைத் தளத்திற்கு அருகே உள்ள சதுப்புநில ஆற்றுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் பயணித்த 25 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் உட்பட 32 பேரும் இந்த கொடூர விபத்தில் உயிரிழந்துள்ளதாக அதிபர் டினுபு உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்களும் விமானத்தின் பாகங்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து உடனடித் தீவிர விசாரணை நடத்த விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, நைஜீரியாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
Comments 0
Be the first to comment.