நகரின் மையப் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய பொதுச் சந்தைக் கட்டடம் இன்று காலை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 200 கடைகளைக் கொண்ட இந்தக் கட்டடத்தில் காய்கறி, மீன், இறைச்சி மற்றும் உலர் உணவுப் பொருட்களுக்குத் தனித்தனிப் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வாகனத் தரிப்பிட வசதி, சுத்தமான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நகர சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய சந்தையால் நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Comments 0
Be the first to comment.