நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
இன்று (17) முற்பகல் 11.45 மணியளவில் இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய அமைப்புக் கட்டுப்பாட்டு நிறுவனம் (National System Operator) மின்சாரக் கட்டமைப்பை விரைவாக இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மறு அறிவித்தல் வரை கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் தகடுகளை (Solar Panels) துண்டித்து, மின்சாரக் கட்டமைப்பை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேசிய அமைப்புக் கட்டுப்பாட்டு நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Comments 0
Be the first to comment.