கொழும்பு: வறட்சியான காலநிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த உலகப் புகழ்பெற்ற யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்கள் (Block 1 & 2) எதிர்வரும் அக்டோபர் 16 ஆம் திகதி முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படவுள்ளன.
கடந்த காலங்களில் நிலவிய கடுமையான வறட்சியான வானிலை காரணமாக வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதியும், வனத்திற்குள் உள்ள வீதி அமைப்புகளை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் இந்த வலயங்கள் மூடப்பட்டிருந்தன.
தற்போது தகுந்த புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு இவை மீண்டும் திறக்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய வனம் மீண்டும் திறக்கப்படுவதைத் தொடர்ந்து, வனவிலங்கு திணைக்களத்தின் கீழ் உள்ள சுற்றுலா விடுதிகள் (Bungalows) மற்றும் முகாம் நிலங்களை (Campsites) முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Comments 0
Be the first to comment.