கற்பிட்டி:

இலங்கையின் புத்தளம் மாவட்டம், கற்பிட்டி முசல்பிட்டி கடற்கரைப் பகுதியில் இன்று (31 அக்டோபர் 2026) சனிக்கிழமை காலை அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்த சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

கடற்கரைக்குச் சென்ற பொதுமக்களால் இந்த சடலம் அவதானிக்கப்பட்டு, உடனடியாக கற்பிட்டி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

கரை ஒதுங்கியுள்ள சடலம் முற்றாக உருக்குலைந்து காணப்படுவதால், அது ஆணா அல்லது பெண்ணா மற்றும் அவர் யார் என்பதை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் யார், அவர் எவ்வாறு இறந்தார் மற்றும் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டாரா அல்லது கடலில் மூழ்கி உயிரிழந்தவரா என்ற பல கோணங்களில் கற்பிட்டி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.