கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக குளியாப்பிட்டிய பகுதியில் 193.0 மில்லிமீற்றர், இலுப்பைக்கடவை பகுதியில் 187.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் 'அர்னாப்' (ARNAB) சூறாவளி தொடர்ந்து வலுவடைந்து வருவதாகவும், இதன் காரணமாக இலங்கைக்கு மறைமுகமான தாக்கம் ஏற்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் வடக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
'அர்னாப்' சூறாவளி எச்சரிக்கை: நாட்டின் பல பகுதிகளில் கொட்டித்தீர்த்த பலத்த மழை!
Comments 0
Be the first to comment.