மட்டக்களப்பு:
கடந்த 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பகுதியில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூன்று பேரையும் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இந்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
விசாரணையின் போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகியோர் நீதிமன்றில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் காணொளித் தொழில்நுட்பம் (Video Technology) ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு கல்லடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை, காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் உறுப்பினர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் வவுணதீவு, கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டமை ஆகிய 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாகவே இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, இந்த கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் லண்டனில் தலைமறைவாக உள்ள 'பொலிஸ் பாய்ஸ்' என அழைக்கப்படும் மொஹமட் பாய்ஸ் என்ற நான்காவது சந்தேகநபருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துமாறும் நீதவான் இதன்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்குக் கட்டளையிட்டார்.
பிள்ளையான் உள்ளிட்ட 3 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு; நீதிமன்றம் உத்தரவு
Comments 0
Be the first to comment.