நுவரெலியா:
மேல் கொத்மலை நீரேந்து பகுதிகளில் நேற்று (26) பெய்த பலத்த மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் நேற்று பிற்பகல் முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யுமாயின், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நீர்த்தேக்க அணைக்கட்டுக்குக் கீழ் பகுதியில் கொத்மலை ஓயாவின் இரு மருங்கிலும் வசிப்போர் மற்றும் அதனைப் பயன்படுத்தும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.