அக்டோபர் மாதத்திற்குரிய முதியோர் கொடுப்பனவுகள் இன்று (29) முதல் பயனாளிகளின் அஸ்வெசும (Aswesuma) வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய தகுதியுடைய முதியோர்கள் இன்று முதல் தங்களது வங்கிக் கணக்குகள் ஊடாக இக்கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இரண்டு கட்டங்களாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலாம் கட்டம் 70 வயதுக்கும் மேற்பட்ட 616,362 முதியோர்களுக்காக 3,081,810,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டம் 70 வயதுக்கும் மேற்பட்ட 79,520 முதியோர்களுக்காக 397,600,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த இரண்டு கட்டங்களின் கீழ் மொத்தம் 695,882 முதியோர் பயனாளிகளுக்காக அக்டோபர் மாதத்தில் 3,479,410,000 ரூபாய் ஒட்டுமொத்தத் தொகையாகச் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.