வவுனியா - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் தாண்டிக்குளம் பகுதியில் இன்று (நவம்பர் 2) அரச பேருந்தும் வானும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பேருந்தும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்றும் தாண்டிக்குளம் பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தின் போது வாகனங்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக பேருந்து மற்றும் வானில் பயணித்த பயணிகள் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை வீதியிலிருந்து அகற்றி போக்குவரத்து நெரிசலை சீர்செய்ததுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா தாண்டிக்குளத்தில் அரச பேருந்து - வான் மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயமில்லை!
Comments 0
Be the first to comment.