வவுனியா மறவன்குளம் பகுதியில் உலக முதியோர் மற்றும் சிறுவர் தின நிகழ்வு மிகவும் கோலாகலமாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது.
தலைமுறைகளுக்கு இடையேயான இடைவெளியைக் குறைத்து, அன்பைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் முதியோர்களும் சிறுவர்களும் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
நிகழ்வின் தொடக்கமாக பாரம்பரிய கும்மியாட்டம், கண்கவர் பேண்ட் இசை மற்றும் சங்கீதக் கதிரை போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. சிறுவர்களுடன் இணைந்து முதியோர்களும் உற்சாகமாக ஆடிப்பாடி விளையாடியது அங்கிருந்த அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழச் செய்தது. குழந்தைகளைப் போல முதியோர்கள் சிரித்து மகிழ்ந்த அந்தத் தருணங்கள் விழாவின் முக்கிய நினைவுகளாக அமைந்தன.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், முதியவர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்குச் சிறப்பு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முதியோர்கள் மீண்டும் குழந்தைகளான நாளாகவும், குழந்தைகள் உண்மையான அன்பைக் கற்றுக்கொண்ட நாளாகவும் இந்நாள் அமைந்துள்ளதுடன், அன்பு வயதை வென்றுள்ளது என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளதாக விழாவில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் நடைபெற்ற இந்தச் கூட்டு விழா பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Comments 0
Be the first to comment.