குருணாகல்:
குருணாகல், ரஜ பிஹில்ல பூங்கா மற்றும் ரஜ பிஹில்ல விடுதிக்கு இடைப்பட்ட வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில், வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த 7 வாகனங்கள் கடுமையான சேதங்களுக்குள்ளாகியுள்ளன.
இன்று (28) காலை 9 மணியளவில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது. திடீரென வீதியில் முறிந்து விழுந்த மரத்தின் கிளைகள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது பாரியளவில் விழுந்தன.
இருப்பினும், இச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் வாகனங்களுக்குள் எவரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்வித உயிராபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வீதியில் வீழ்ந்துள்ள மரத்தை அகற்றி, போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Comments 0
Be the first to comment.